பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 16 கவிஞர் முருகு சுந்தரம் نشان 'நான் சிவன்கோவில் தாசி; நீரோ நாமதாரி. இவ்வூர் மக்கள் என்னை இகழாதிருக்க வேண்டு மானால் நீரும் சைவராக வேண்டும்!" என்று நிபந்தனை விதித்தாள் மோகனாங்கி. காதலுக்கு முன்னால் மதம் கரைந்து போயிற்று. தீந்தமிழ்ப் புலவர் திருநீற்றுச் சைவரானர். திருமண்ணை அழித்துவிட்டுத் திருநீறு பூசினார். மோகனாங்கி யோடு காளமேகத்துக்கு ஏற்பட்ட இப்புதிய உறவை நயம்பட உரைக்கவந்த சுரதா, இருநெஞ்சங் கொண்டவளின் மகளே! தெங்கின் இளநீரே! இனிநமக்குள் ஆண்பால் பெண்பால் பிரிவின்றி வேறெந்தப் பிரிவு மில்லை பேதமில்லை; இருசமய விளக்க மில்லை. திருமங்கை ஆழ்வாரின் நெற்றிக் கோடு தேவையில்லை, நீதேவை என்ப தாலே. சரிஎன்னைப் பார்பெண்ணே! எனக்குன் னோடு சம்பந்தம் உண்டதனால் நான்சம் பந்தன்!" என்று பாடுகிறார். அதோடு விட்டாரா? மீண்டும் தொடர்கிறார்காளமேகம். இரட்டையர் நாம்; இணையெதுகை இனிநாம்; நீயோர் ஈரவயல்; நானோர்ஏர் உழவன்; கட்டில் சரித்திரத்தின் சாசனமே! அன்-அம் என்னும் சாரியையே! தொடுபதம்என் றழைக்கும் சோறே!’ அவளை அன்னமே!’ என்றழைக்காமல் 'அன்-அம்’ என்னும் சாரியையே என்றழைப்பதும், அவளைத்