பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 | சுரதா ஓர் ஒப்பாய்வு يوليو 'தொடு பதம்’ என்று குறிப்பிடுவதும் சிந்தித்து மகிழத்தக்க சிறந்த சொற்சித்திரங்கள். கவிஞர்களைத் தலைவன் தலைவியாகப் படைக்கும்போது அவர்கள் புலமையையும் வெளிப்படுத்தச் சுரதா தவறுவ தில்லை! கோவலன், மாதவியின் கூந்தலையும் அவள் குறும்பற்களையும், பாராட்டிக் கூறும்போது, நிறைந்தநாள் நிலவே! கேளாய் நின்னங்கம் கட்டித் தங்கம்: குறுந் தொகைப் பற்கள் முத்தின் குடும்பமே! நெருங்கி நீண்டு நிறந்தரும் தினது கூந்தல் நெடுந் தொகைச் செல்வம் அன்றோ?" என்று குறிப்பிடுகிறார். குறுந் தொகைப் பற்களும், நெடுந்தொகைச் செல்வமும் சிறந்த சொல்லாட்சிகள்.