பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 சுரதா ஒர் ஒப்பாய்வு قواني சுரதாவின் கதைக் கவிதைகள் எனக்குக் கதைக் கவிதைகள் மிகவும் பிடிக்கும். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என் ஆங்கில ஆசிரியர் இராஜரத்தினம், லாக்கின்வர் (Lockinwar) கவிதை நடத்துவார். 'லாக்கின்வார் என்பவன் காதல்வீரன்; 'ஸ்காட் லாந்துப் பிருதிவிராஜன். தன்னைக் காதலிக்கும் எதிரியின் மகளை, அவள் கோட்டைக்குள்ளேயே நுழைந்து, குதிரையின் மீது தூக்கிவைத்துக்கொண்டு செல்லும் அவன் வீர சாகசத்தை உணர்ச்சிகரமாக எங்களுக்கு விளக்கிவிட்டு, there comes Lord Lockinwar' என்று பலகணிப் பக்கம் கை நீட்டுவார் எங்கள் ஆசிரியர். எல்லா மாணவர்களும் எங்களை மறந்து பலகணிப் பக்கம் திரும்பிப் பார்ப்போம். கீட்ஸ் எழுதிய இசபெல்லா(sabella)வும், லார்கா எழுதிய மோசக்காரமனைவி(Theiathlesswie)யும் நான் பலமுறை படித்துச்சுவைத்த கதைக் கவிதைகள்.