பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్ఞ சுரதா ஓர் ஒப்பாய்வு 121 இந்த நூற்றாண்டுச் சிறுகதைத்துறை மேலை நாட்டுத் தாக்கத்தால் மிகவும் புதுமையாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்தச் சிறுகதை உத்தியைக் கவிதை யில் பயன்படுத்தும்போது, அது கதைக் கவிதையாக உருப்பெறுகின்றது. தரமான கதையம்சமும், சுருக்கமும், அதிர்ச்சிமுடிவும் சிறுகதையைப் போலவே இதிலும் கையாளப்பட வேண்டும். இந்த உத்தியைப் புரிந்துகொண்டு முதன் முதலாகக் கதைக் கவிதைகளைத் தமிழில் செய்தவர் பாரதிதாசன். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், மாந் தோப்பில் மணம், காதற் குற்றவாளிகள், காதற் பெருமை, காதலைத் தீய்த்த கட்டுப்பாடு, மூடத் திருமணம், குழந்தை மணத்தின் கொடுமை, தவிப்பதற்கோ பிள்ளை?, பெண்குரங்குத் திருமணம் என்பவை மிக அருமையான கதைக் கவிதைகள். சுரதா, தமது குருநாதரைப் பின்பற்றிக் கதைக் கவிதை எழுதத் தொடங்கினார். பாரதிதாசன் கதைக் கவிதைக்கும் சுரதாவின் கதைக் கவிதைக்கும் அடிப்படையில் ஒரு வேறு பாடுண்டு. பாரதிதாசன் கதைக்கவிதைகள் மடமை, கைம்மைக் கொடுமை, சாதிக் கொடுமை, குழந்தை மணம் ஆகியவற்றை எதிர்த்துப் பிரச்சார நோக்கில் எழுதப்பெற்றவை. ஆனால் சுரதாவோ கலை