பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கவிஞர் முருகு சுந்தரம் 4. “என்னருமைக் காதலரே! நீரும் நானும், இணைபிரியா அன்றிலென இருந்து வந்தோம். என்செய்வேன் இப்போது? 'தியை மூட்டி எரித்திடுக' என்கின்றார் என்றன் தந்தை! பொன்மலையே! நானும்மை எரிப்பதற்கோ புவிமீது பிறந்திட்டேன்? அந்தோ! பெண்ணில் என்னைவிட மாபாவி யாரு மில்லை! இதற்குத்தானோஉம்மைக் காத லித்தேன்? 'கத்திமன்னர் கனைக்கின்றார்; புள்ளிக் கொள்ளிக் கண்ணாலே சுடுகின்றார்; கருவண் டைப்போல் முத்தமிட்ட காதலரே! புதிய பூக்கள் மூச்சுவிடும் தோட்டத்தில், தங்கள் ஆவி அத்தமிக்கக் காரணம்தான் ஆனேன்! அத்தோ அனல்வெப்பம் தாங்காமல் துடிக்கும் போது, சத்தமிட்டால் நம்முறவு தெரிந்து போகும்; சரித்திரத்தை மெளனத்தால் மறைப்பீர்!" என்றாள். காதலனைக் கொப்பரையில் நிறுத்திக் கெண்டைக் கண்மீது கருநீலக் கடல்நிறுத்தி, வேதனையால் வெந்தபடி, அடுப்பில் வைத்த விறகுக்குத் தீயிட்டாள், மயங்கி வீழ்ந்தாள். சாதத்தைப் போற்கவிஞன் வெந்தான்! காதற் சரித்திரத்தின் ஒர்பகுதி கரியா யிற்று! காதலிலே தோல் வியுற்ற கன்னி அன்னம், கண் ணிரை வழித்தபடி எழுந்தி ருந்தாள்.