பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్ఞ சுரதா ஓர் ஒப்பாய்வு 127 'மதியில்லா விண்ணானேன்! வலைமீன் ஆனேன்! மருந்தில்லாப் புண்ஆனேன்! மணல்வீ டானேன்! நிதியில்லா வெறும்பெட்டி ஆனேன்! நானோ நீரில்லாக் குளமானேன்! நான்கு நண்டு மிதித்ததொரு சிறுஅத்திப் பழம்போல் ஆனேன்! வீதியிலே விட்டெறிந்த வீணை யானேன்! கதவில்லா வீடானேன்; கானல் ஆனேன்! கரித்துணியில் முடிந்த தொரு வைர மானேன். கலைவளர்க்க ஒர்காலம்! என்றன் வாழ்வில் காதலிக்க ஒர்காலம்! கண்ணிர் விட்டுப் புலம்புவதற் கோர்காலம்! இனிமேல் ஏது பொற்காலம்? புதுஇன்பம் பொங்கும் காலம்! இலையெனக்கு இனிமேலே நல்ல காலம்! எதிர்காலம் உதிர்காலம்' என்று கூறிக் குலைவாழை, காற்றடித்துச் சாய்தல் போலே கொதித்திட்ட கொப்பரையின் மீது சாய்ந்தாள். குறிப்பு விளக்கம் 1. பக்.56, நூல்: அமுதும் தேனும் (ஆண்டு 1960)