பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கவிஞர் முருகு சுந்தரம் شه இவர்கள் நடத்திய ஓவியக் கண்காட்சியைக் காண வருபவர்கள், ஒரு பொதுக் கழிப்றை வாயிலாக இட்டுச் செல்லப்பட்டனர். உள்ளே சென்றவுடன் பார்வையாளர்களுக்குக் குறுகிய கைப்பிடி வைத்த ஒரு கோடரி தரப்பட்டது. அவர்கள் விரும்பினால் காட்சிக்கு வைக்கப்பட்ட படங்களைக் கோடரியால் தாக்கிக் கிழிக்கலாம். காட்சிமுடிவில் ஓர் இளம்பெண் Qou65160',fipeg),60L -9/60ffigil (First communion dress) ஆபாசக் கவிதைகள் பாடினாள்.' ஆந்திர நாட்டில் திகம்பரக் கவிஞர்கள் என்னும் ஒரு கூட்டம் இருக்கிறது. இவர்கள் நடுஇரவில் தங்கள் நூல்களை வெளியிட்டுப் பிச்சைக்காரர்களுக்குப் படித்துக் காட்டுவர். ஏன் இவர்கள் இப்படிச்செய்கிறார்கள்? போலித் தனமான பழைய மரபுகள், கலாச்சாரங்கள், நாகரிகம் ஆகியவற்றின் மீது கொண்ட வெறுப்பே இக்கோபக் காரர்களை இவ்வாறு நடந்துகொள்ளச் செய்கிறது. சுரதாவும் இளமையில் ஒரு கோபக்கார இளைஞராக (Angry young man)த்தான் இருந்தார். அதனால்தான் தாம் எழுதி வெளியிட்ட 'அமுதும் தேனும் கவிதைகளைக் கடற்கரையில் ஒரு தொழுநோயாளியிடம் படித்துக்காட்டி முன்னுரை பெறுகிறார்.