பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா ஓர் ஒப்பாய்வு 133 குருத்து நிலவே! கொல்லிப் பாவையே! கண்ணே! மணியே! கனியே! சுவையே! பூவிற் சிறந்த தாமரைப் பூவே! யாவிற் சிறந்ததே ரிசைவெண் பாவே! என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் கட்டித் தழுவியும், கனியிதழ் ஊன்றியும், தொட்டும் சுவைத்தும் தோளில் சாய்ந்தும், ஒருவர் நிழலில் ஒருவர் ஒதுங்கி, இருவரெனும் தோற்றம் இன்றி இருந்து, இனிமைத் தனிமையில் தினந்தினம் மகிழும் காதலர் இருவர் கனிமொழி பேசி, வரிநிழல் வழங்கும் சோலைவரு கின்றனர். காமச் சங்கீதம் பாடத் தலைவி சுவைத்துத் தருகிறாள் முத்தம்! அதற்குப் பின்னர், அந்த அணங்கு பார்வையால் தூய பளிங்கு காட்டியும், காம்பு மூங் கிலைத் தோள்தனில் காட்டியும் சின்ன இடைதனில் மின்னல் காட்டியும் ஆங்கொரு புறத்தில், காற்றினால் ஆடும் அஃறிணை மலர்க்கொடி அருகினில் நின்று, எதிரே நிற்கும் இளமை அழுகனை மாவடுப் பார்வையால் 'வாருங்கள்’ என்கிறாள். அந்தச் சமயம் அங்கொரு வண்டு பருவ மடைந்த திருவாண மலரின் வாயைச் சுவைத்தும், மதுவுண்டு மயங்கியும் பாட்டுப் பாடிப் பறந்துதிரி கின்றது.