பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கவிஞர் முருகு சுந்தரம் شه வாலிபன் அந்த வண்டினை நோக்கி "அந்தி மலர்களைச் சந்திக்கும் வண்டே! பறக்கும் நாவற் பழமே! நாங்கள் மலரைத் தொடுக்கும் மானிடர்; நீயோ மலரில் படுத்து மன்மதச் சுவைபெறும் மரகதச் சோலையின் மருமகப் பிள்ளை பூவின் பொடியையும், பொங்குசெந் தேனையும் அன்றாடம் நன்குநீ ஆராய்ச்சி செய்கிறாய்; அதனால் மலர்களின் ஆராய்ச்சி தன்னில் உனக்குமேல் அனுபவம் ஒருவர்க்கு மிராது! ஆதலால்! பறக்கும் ஆறுகால் வண்டே! உன்னிடம் ஒன்று கேட்க நினைக்கிறேன் எனது தலைவியின் இளங் கூந்தல் போல மணத்தை வழங்கும் மதுமலர் உண்டா? பாட்டை நிறுத்திப் பதில்சொல் வண்டே' குறுந்தொகைப் பாடல் திருவிளை யாடலாய் ஆகும் போது அந்தச் செய்யுள் பட்டத் தரசி ஆனால் என்ன?” காவியக் கடிதங்கள் 1960 வாக்கில் முன்னணி என்ற இலக்கிய ஏடு ஒன்று சென்னையிலிருந்து வெளிவந்தது. குமுதம் அளவில் சிறப்பாக வெளிவந்தது. அதில் சுரதாவின் கவிதைகள் தொடர்ந்து வெளியிடப்பெற்றன.