பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 சுரதா ஒர் ஒப்பாய்வு قيو சுரதாவின் கவிதைக்காகவே பலர் அதை விரும்பி வாங்கினர். அதில் சுரதா கடிதங்களைக் கவிதையாக்கி யிருந்தார். அவற்றுள் மாவீரன் நெப்போலியன் தனது மூத்த மனைவியான ஜோசஃபைனுக்கு எழுதிய கடிதமும், இராஜாராம் மோகன்ராய் இந்தியப் பெண்கள் உடன்கட்டையேறும் கொடுமை பற்றி வைஸ்ராய் பெண்டிங் துரைக்கு எழுதிய கடிதமும் குறிப்பிடத்தக்கவை. அக்காவியக் கடிதங்கள், கவிதை விரும்பிகளிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தின என்றே சொல்லலாம். அந்தக் காலத்தில் விளம் பரமான பெரிய பத்திரிகைகளே கவிஞர்களுக்குப் பத்து ரூபாய் அன்பளிப்பு வழங்கிய நேரத்தில், முன்னணி சுரதாவுக்குச் சுளையாக நூறு ரூபாய் அன்பளிப்பு வழங்கியது பாராட்டத்தக்க செய்தியாகும். நெப்போலியன் நினைக்கிறான் பொன்முடிபோற் சிறந்தவனே! பிரான்சு நாட்டின் பூந்தோட்டம் போன்றவளே! பளிங்குப் பெண்ணே! என்னைவிட மூத்தவன்தி; எனினும் நல்ல இளந்தளிரைப் போன்றவள்தி; இன்பக் கேணி. நின்றுநின்று மயக்கிவரும் மயில் நீ; ஈர நிலவும் நீ, நித்திரைச்சத் திரமும் நீயே. தின்பனவும் உண்பனவும் இரவில் தொட்டுத் திறக்கின்ற புத்தகத்தின் தொகுப்பும் நீயே.