பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கவிஞர் முருகு சுந்தரம் 4 பெரும் பயன்தரும். அதுபற்றி அவர் என்ன நினைத்திருக்கிறாரோ தெரியவில்லை. தகுந்த உதவியாளர்களை வைத்து அவர் தொகுத்துத் தந்தால் பிறர் வெளியிட வாய்ப்புண்டு. அவரும் வெளியிடலாம். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் பற்றிய நரலை வெளியிடும் நேரத்தில் இத்தகைய விழைவை வெளியிடாமல் இருக்க முடியவில்லை. அன்பாலும் அணுகிப்பழகும் பண்பாலும் எண்ணற்ற பேரை எடுபிடிகளாக்கி, நினைக்கும் புதுமைகளை நிகழ்த்தி வரும் நிகரற்ற ஆற்றல் மிக்கவர் கவிஞர்! அவரது சொல்லும் செயலும் தனித்தன்மை உடையன என்பதை நிகழ்காலம் அறியும். வருங்காலம் நினைவு கொள்ள வேண்டுமல்லவா? அதற்கு இந்த ஒப்பாய்வு நால் உதவும் என்று நம்புகிறேன். சிறந்த கவிஞரும் சிந்தனையாளருமான சேலம் முருகு சுந்தரம் அவர்கள் இந்த நாலை எழுதியதன் மூலம் புதியதொரு முத்திரையைப் பதித்துள்ளார். இந்நால் எமது சேகர் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவரவேண்டுமென்று அவர் விரும்பினார். நானும் ஆர்வத்தோடு வெளியிடுகிறேன். ஆசிரியருக்கு நன்றி. கரதா எனும் கவிமலரில் மொய்த்துச் சுவைத்த பலநூறு தேன்சிட்டுகளில் நானும் ஒருவன். புரட்சிக் கவிஞரின் கவிதைகளில் மூழ்கியிருந்தாலும்,பாவலரேறுவாணிதாசனாருடன்பழகியிருந்தாலும், நெஞ்சம் நீங்காக்கவியரசர் கண்ணதாசன் அவர்களுடன் பழகிப் பணியாற்றியிருந்தாலும், சுரதா அவர்களின் ஈர்ப்பும் என்னை ஆட்கொண்டது. ஒப்பிட முடியாத, ஒருவரியில் மதிப்பிட்டுக் கூறி விட முடியாதவர், விந்தையான உணர்ச்சிக்குரியவர் சுரதா அவர்கள்.