பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 சுரதா ஓர் ஒப்பாய்வு فقي பால்திலவுப் பத்தினியும் பாடை மீது படுப்பானேன், உடன்கட்டை ஏறு வானேன்? வேல்தொடரும் விழியுடையாள் கணவ னோடு வெந்துவிட வேண்டுமென்ப தென்ன தியாயம்? தசரதன்தான் தடுத்தானா? கேடு கெட்ட தத்துவத்தை இராமன்தான் தடுத்திட் டானா? அசைவறியா வீரத்தால் விவேகத் தாலே அரசாண்ட மூவேந்தர் தடுத்த துண்டா? பசையறியாக் கற்களினால் சிலைகள் செய்த பல்லவர்க்கோ கன்னடர்க்கோ, தெலுங்கு பேசும் விசயநகர் வேந்தர்க்கோ, கீதை தந்த விட்டுணுக்கோ தீமையென்று பட்ட துண்டோ? வித்தைபல கற்றவரே, தீராத் தீமை விளைத்து வந்த பிண்டாரிக் கூட்டத் தன்னை அத்திமரத் தின்பழத்தை தண்டின் கூட்டம் அடிவைத்து மிதிப்பதுபோல் மிதித்தீர்; இன்னும் எத்தனையோ அரியசெயல் புரிந்தீர்; தங்கள் இதயத்தில் நல்லெண்ணம் இருப்ப தாலே சித்திரத்தேர் தீப்பற்றி எரிதல் போன்ற திச் செயலைத் தடுப்பீரென் றெண்ணு கின்றேன்." இப்படிக்கு இராசாராம் மோகன்ராய்.