பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கவிஞர் முருகு சுந்தரம் மி சொல்விளக்கம் 'சொல்விளக்கம்' என்னும் சுவையான கவிதைப் பகுதியைச் சுரதா தம் கவிதை ஏட்டில் தொடங்கி யிருந்தார். சொல்விளக்கம் சுவையான சொல் விளையாட்டு; பத்திரிகைத்தனமான பகுதி. இதில் கவிஞரின் புலமையும், நுட்பமும், சிந்தனை யாற்றலும் பளிச்சிடக் காணலாம். கலப்பை நிலத்திலுள்ள மேல்மண்ணைக் கீழ்மண் ணோடு நீண்டுள்ள ஏர்முனையால் ஒன்று கூட்டிக் கலப்புதனை உண்டாக்கும் கார ணத்தால் கலப்பையென்று பெயரிட்டார், கலப்பை மூலம் நிலத்தில் நாம் உண்டாக்கும் கலப்பை, மாந்தர் நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோ மாயின் கலப்புமணம் உருவாக வழியுண் டாகும்; கலப்புமணத் தால்சாதி செத்தே போகும்." பாம்பு 'பாம்பென்னும் பெயரிதற்கு வந்த தேனோ பாம்பாட்டி எனக்கேட்டாள். புற்றில் தரங்கும் தாம்பென்னும் பாம்புதனை ஆட விட்டுத் தன்பிழைப்பை நடத்திவந்தோன் அவளை நோக்கி, 'வேம்புக்கும் அரசுக்கும் வேர்கள் உண்டு; வேங்கைக்கும் மானுக்கும் கால்கள் உண்டு; பாம்புக்குக் காலில்லை; எனினும் நாகப் பாம்புக்கெல் லாம்புவியே பாத மாகும்.