பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கவிஞர் முருகு சுந்தரம் شه எச்சில் இரவுகள் எச்சிலை நாம் அருவருப்போடு பார்க்கிறோம். சோரம் போனவளை எச்சிற்கனி' என்று இகழ் கிறோம். பிறப்பது முதல் சாகும்வரை வாழ்க்கையே சுரதாவுக்கு எச்சிலாகப் படுகிறது. அனைத்தும் எச்சில்' என்பது அவர் கொள்கை. எனவே அவர் வியர்க்கும் இரவுக்கு எச்சில் இரவு' என்று பெயர் கொடுத்தது மிகமிகப் பொருத்தமே. குழந்தையோ பெற்றோர் எச்சில் கூடையோ குறத்தி எச்சில் பழங்களோ பறவை எச்சில் பால்தயிர் இடைச்சி எச்சில் மழையெலாம் முகிலின் எச்சில் மதுவெலாம் வண்டின் எச்சில் எழில்மிகு புடவை வேட்டி எல்லாமே நெய்வோன் எச்சில்! குளத்துநீர் மீனின் எச்சில் குளிரிதழ்ச் சத்து முத்தம் விளைத்திடும் போதில் எச்சில்; விதையெலாம் நம்வாய் எச்சில்; சுளைப்பலாப் பழமும் சோறும் சுவைத்திடும் பொழுதில் எச்சில்; அளந்ததரல் நினைவின் எச்சில் அனைத்துமே எச்சில் எச்சில்!”