பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கவிஞர் முருகு சுந்தரம் 4 சுரதாவின் எச்சில் இரவு, மரபுசார்ந்த வசன கவிதை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். சுரதா, மரபுச் செய்யுளில் சொல்லியிருப்பதை வசனத்தில் சொல்லியிருக்கிறார் என்று. இருபதாம் நூற்றாண்டுப் புதுக்கவிதை என்ப தற்குப் பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலக் கவிஞர்களும் திறனாய்வாளர்களும் நிறையச் செய்திகளைப் பண்புகளாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். புதுக் கவிதையை வசனத்திலும் எழுதலாம்; எழுதப் படுகிறது. வசனத்தைக் கவிதைக்கு எதிர்ச் சொல்லாகக் கருதக் கூடாது. சிந்தனை, கற்பனை, உணர்ச்சி, நயம், அழகு யாவும், வசனம் கவிதை ஆகிய இரண்டுக்கும் பொதுப் பண்புகள். வசனத்துக்கு எதிர்ச்சொல் செய்யுள்தான். செய்யுளில் கவிதை எழுதுவது மேடையில் ஆடுவது போன்றது; வசனத்தில் கவிதை எழுதுவது கயிற்றின் மேல் ஆடுவது போன்றது. செய்யுளில் கவிதை எழுதும்போது எதுகை, மோனை, சந்தம், அடி, தொடை என்ற பக்க வாத்தியங்கள் உண்டு; வசன கவிதைக்கு அந்த வசதிகள் இல்லை. கயிற்றின் மேல் ஆடுபவன் கொஞ்சம் நிலைகுலைந்தாலும் கீழே விழுந்து விடுவது போல,