பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 சுரதா ஒர் ஒப்பாய்வு يوليو சுவரும் சுண்ணாம்பும் இத்தலைப்பில் சுரதா, தாம் நடத்திய ஏடுகளில் திரைப்படச் செய்திகளைக் கவிதையாக்கியிருந்தார். நடிகைகளைப் பற்றிச் சிற்றின்பச் சுவைபடச் சூளை சுப்ரதீபக்கவிராயர்', 'மன்மதமணி என்ற புனை பெயர்களில் ஒளிந்துகொண்டு அவர் எழுதுவது வழக்கம். இப்பகுதிக்குச் சுவரும் சுண்ணாம்பும்' என்று பெயர் சூட்டக் காரணம் என்னவென்று நான் ஒருமுறை சுரதாவைக் கேட்டபோது, 'சும்மாதான்' என்று பதிலிறுத்தார். 'உங்கள் தகுதிக்குச் சுவரும் சுண்ணாம்பும் தேவைதானா? என்று கடற்கரைப் பேட்டியில் அவரைக் கேட்டபோது, 'அதை ஒரு காரணத்துக்காக எழுதினேன். காதல், வீரம், பக்தி - இம்மூன்று பொருளைப் பற்றி எழுதுவதுதான் கவிதை மரபாகத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. அம்மரபை மட்டந்தட்ட எழுதப்பட்டதுதான் இந்தச் சுவரும் சுண்ணாம்பும்' என்று கூறினார். இப்பகுதியில் எடுத்துக்கொண்ட விஷயம்' 'ஒருமாதிரியாக இருந்தாலும் கவிதை தரமானது.