பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 சுரதா ஒர் ஒப்பாய்வு قبليو மனிதர் சுரதா ஒரு கவிஞனுக்குள் எப்போதும் இரண்டுபேர் இருக்கிறார்கள். ஒருவன் மனிதன்; மற்றொருவன் கவிஞன். இந்த இரண்டு பேருக்கும் சில சமயங்களில் எந்த உறவும் இருப்பதில்லை. மனிதன் மனிதனாகவே நடந்துகொள்கிறான்; கவிஞன் கவிஞனாகவே நடந்து கொள்கிறான். சில நேரங்களில் இந்த இரண்டு பேரும் முரண்படுவதுகூட உண்டு. ஏதன்சு நகரப் பேரவையில், தம்மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசிய சாக்ரட்டீஸ் கவிஞர்களைப் பற்றிய தம் சொந்தக் கருத்தையும் சொல்கிறார்: “கவிஞர்களுடைய சிந்தனை ஆற்றலையும், தம் படைப்புக்களில் அவர்கள் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களையும் கண்டு, நான் மிகவும் வியப் படைந்தேன். அவர்களைக் கண்டு அவர்களோடு உரையாடியபோது, அவர்களுட் பலர் ஒன்று மறியாத வர்களாகவும், முட்டாள்களாகவும் இருந்ததை அறிந்துகொண்டேன்.