பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 சுரதா ஓர் ஒப்பாய்வு قویو மெய்விளக்கக் கவிஞன் ஜான் டன்னைப் பற்றி அவனது வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடும்போது, அவனை ஒரு Cynic என்று குறிப்பிடுகின்றனர். cynic. என்ற சொல்லுக்குச் சிடுசிடுப்புக்காரன், எப்போதும் பிறர்மீது குற்றங் காண்பவன் என்னும் பொருள் உண்டு. சுரதா ஒரு சுவையான மனிதர். சுரதாவிடம் மிகவும் எச்சரிக்கையாகப் பழக வேண்டும். எந்த நேரத்தில் என்ன சொல்லை எடுத்து வீசுவார் என்று சொல்ல முடியாது. பிறர் அறியா மையைச் சகித்துக்கொள்ள மாட்டார். சரக்கில்லாத வனை மதிக்க மாட்டார்; தூக்கி எறிந்துவிடுவார். 1974ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் சுரதா சேலம் வந்திருந்தார். அப்போது அவருடைய சுரதா இதழ்" புத்தக வடிவில் ஆஃப்செட் வண்ணப்படத்தோடு வெளியாகியிருந்தது. புதுப்பெண்ணைத் தேனிலவுக்கு அழைத்து வருவதுபோல், மெருகு குலையாத சுரதா இதழோடு வந்திருந்தார் சுரதா. 'சுரதா பொங்கல் மலர் சிறப்பாக வெளியிடப் போகிறேன். எனக்குச் சேலத்தில் விளம்பரங்கள் திரட்டித் தர வேண்டும்" என்று கேட்டார். சேலம் சுரதா அன்பர்களுள் குறிப்பிடத்தக்கவரான புலவர் அருச்சுனனும் நானும் இரண்டு மூன்று நாட்கள் அலைந்து திரிந்து ரூ 2,000/-க்கு விளம்பரம் திரட்டித் தந்தோம்.