பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 சுரதா ஒர் ஒப்பாய்வு قائي பட்டு வந்தது. கோபத்தால் அவர் உடல் நடுங்கியது. நானும் புலவர் அருச்சுனனும் செய்வதறியாது திகைத்தோம். சுரதா போருக்குத் தயாராகிவிட்டார். 'நான் இங்கே விளம்பரம் வாங்கிப் போக வந்தேன். சரி! அது கிடக்கட்டும். இப்போது இதை (விவேகானந்தர், நிவேதிதா விவகாரத்தை) இரண்டிலொன்று பார்த்து விடுவோம்' என்று தோள்தட்டிக் கோதாவில் குதிக்கத் தயாரானார். கவிஞரைச் சமாதானம் செய்து எப்படியோ வெளியில் அழைத்து வந்துவிட்டோம். அடுத்த நாள் நான் மட்டும் தனியாகப் போய் அச் செல்வரைக் கண்டு முதல் நாள் நிகழ்ச்சிக்குச் சமாதானம் சொல்லிவிட்டு, ஒரு பக்க விளம்பரம் வாங்கிக்கொண்டு வந்தேன். சுரதாவுக்கு எப்போதும் போலித்தனம் பிடிக்காது. திறமையில்லாத எவரையும் மதிக்கமாட்டார். கொஞ்சம்கூடக் கூச்சநாச்சமில்லாமல்-வேண்டியவர், நீண்டநாள் பழகியவர் என்றதாட்சண்யம் பார்க்காமல் உள்ளத்தில் நினைப்பதை அப்படியே அம்மணமாகக் கொட்டிவிடுவார். சிலசமயம் கேட்பவர் நடுங்கி ஒடுங்கிப் போகுமளவுக்கு உண்மைகளைப் பச்சையாக உதறிவிடுவார். கவிஞர்நன்னியூர் நாவரசன்சுரதாவின் அணுக்கச் சீடர்களில் ஒருவர்; காவிரிக் கரைப் பண்ணையார். சு - 11