பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 *-* கவிஞர் முருகு சுந்தரம் கி. அதற்கேற்ற முகவெட்டு அவருக்கு இயல்பாக அமைந்திருக்கிறது" என்று புகழ்ந்து பேசினார். அதற்குப் பின் பேச எழுந்த சுரதா, 'நண்பர் சாண்டில்யன் எம்.ஜி.ஆரின் முகத்தைப் பற்றிக் கூறிய கருத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. எம்.ஜி.ஆருக்குச் சதுரமுகம். அதுவே வட்டமுகமாக இருந்திருந்தால் வரலாற்றுக் கதாநாயகனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்' என்று பேசிவிட்டு அமர்ந்துகொண்டார். அதன் விளைவு' எம்.ஜி.ஆர். படத்தில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பத்தாயிரம் ரூபாய் வாய்ப்பு பறிபோயிற்று. சுரதா கதராடை அணிந்துகொண்டு கொஞ்சநாள் காங்கிரஸ் மேடைகளில் பேசிக்கொண்டிருந்தார். சென்னையில் காங்கிரஸ் கூட்டம். மேடையில் காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் பக்தவத்சலம் வீற்றிருந்தார். சுரதாவைப் பேசச் சொன்னார்கள். சுரதா எழுந்ததும், நான் காந்தியைவிட ஒழுக்கமானவன்' என்று பேச்சைத் தொடங்கினார். காங்கிரஸ் மேடை சுரதாவைத் தாங்குமா? அன்றிலிருந்து காங்கிரஸ் கூட்டத்துக்கு அவரை யாரும் அழைப்பதில்லை. இவர்தான் மனிதர் சுரதா! குறிப்பு விளக்கம் ★ 1. Apology of socretes - by plato.