பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 சுரதா ஓர் ஒப்பாய்வு يوليو கவிஞர் சுரதா 1973ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள்17,18 தேதிகளில் பூம்புகார் விழா. சிற்பச் சிறப்பு மிக்க சிலப்பதிகாரக் கலைக்கூடம் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்களால் அன்று திறந்து வைக்கப்பட்டது. இரண்டு நாட்களும் அடர்த்தியான முத்தமிழ் நிகழ்ச்சிகள். தமிழகத்தின் இயல் இசை நாடக வித்தகர்கள் அத்துணைப் பேரும் கடற்கரைக் கூடாரங்களையும், சுற்றுப்புறத் தங்கல் மனைகளையும் மொய்த்துக் கொண்டிருந்தனர். கவிஞர்களாகிய எங்களுக்கு வைத்தீஸ்வரன் கோயிலில், ஒரு தங்கல் மனையில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கவிஞர் சுரதாவும் கொத்த மங்கலம் சுப்புவும் எனக்கு முன்பாகவே அங்கு வந்து தங்கியிருந்தனர். கவிஞர்களின் உபயோகத்துக்காக ஒரு தனிக் காரும் வழங்கப்பட்டிருந்தது. கவிஞர் சுரதா ஒர் உரையாடல் மன்னர் (Conversationist). ஓயாமல் விடிய விடியப் பேசுவார். 'சுரதா இரவுக்கும்', 'முதலிரவுக்கும் சுவையில் அதிக வேறுபாடில்லை. சங்க இலக்கியம்.முதல் சண்முகம்