பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கவிஞர் முருகு சுந்தரம் கி. அவர்களுள் தமிழறிஞர் கி.வா.ஜ., நா.பார்த்தசாரதி ஆகிய இருவரும் குறிப்பிடத் தக்கவர்கள். மேடையிலிருந்த ஒருசிலர், திராவிட இயக் கத்தைப் பிரிவினை சக்தி என்று குறிப்பிட்டதோடு, திராவிட இயக்கத் தலைவர்களையும் நையாண்டி செய்து பேசத் தொடங்கினர். அமர்ந்திருந்த கூட்டத்தில் குமுறல்! ஆனால் வாய்திறக்க யாருக்கும் துணிச்சல் இல்லை, அவசர நிலை அடக்குமுறை அப்படி! திராவிட இயக்கத் தலைவர்களெல்லாரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிலருக்கு நல்ல அடி சிறைக் காவலர்களின் பூட்ஸ் காலால் மார்பில் உதைபட்டு ஒரு தலைவர் இறந்தே போனார். இந்த நேரத்தில் யாரால் வாய் திறக்க முடியும்! ஆனால் கூட்டத்திலிருந்து ஒருவர் சிங்கம்போல் சிலிர்த்து எழுந்தார். 'டேய்! உங்களால் என்ன செய்ய முடியும்?' என்று கர்ஜித்தார். மேடை வியப்பால் வாயடைத்து நின்றது. அவரை அடித்து நொறுக்கிப்போலீஸ் ஜீப்பில் ஏற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்போடு கூட்டம் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தது. நல்லவேளை அப்படி ஏதும் நடக்கவில்லை! அவர்தான் கவிஞர் சுரதா