பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 கவிஞர் முருகு சுந்தரம் شة நீட்டுயர்ந்த திண்ணையின்மீதமர்ந்திருப்பார்: நின்றபடி நானிருப்பேன்; 'உள்ளே நீபோய்ப் பாட்டுயர்ந்த சுவடிகளை நீண்ட நேரம் படி யென்பார்'; 'நன்றாகப் புரிந்து கொண்டு தீட்டுகநீ பாட் டென்பார் பிழையிருந்தால் திருத்துகின்றேன் நா னென்பார்; எழுதி வந்து காட்டிடுவேன், அதைத்திருத்திக் கொடுப்பார்; அந்தக் கவிதைகளென் கைவசத்தில் இப்போதில்லை. நீரைப்போல் அண்ணாவும், திண்மை கொண்ட நிலத்தைப்போல் பெரியாரும், கரிகாற் சோழன் தேரைப்போல் அழகிரியும் இருந்த நாளில் தீயைப்போல் பாவேந்தர் இருந்து வந்தார். நேருக்கு நேராகப் பகைவர் தம்மை நின்றெதிர்த்த பெருங்கவிஞர், தம்வாழ் நாளில் ஆருக்கும் அஞ்சாமல் வாழ்ந்து வந்தார்; அவரேஎன் கவியாசான்; அதங்கோட் டாசான் குறிப்பு விளக்கம் 1. பக்.154, துறைமுகம் 2. பக்.155, துறைமுகம்