பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கவிஞர் முருகு சுந்தரம் شه கவியரங்குகளுக்காகவும், பத்திரிகைகளுக்காகவும் எழுதுகிறார். தாமே விரும்பி எழுதுவதில்லை. 'அறிவு முதிர்ச்சி பெற்றிருக்கும் இந்த வயதில், நீங்கள் தமிழுக்கு ஒரு நல்ல காப்பியம் படைத்துத் தந்தால் என்ன?’ என்று நண்பர்கள் கேட்டால், நான் இதுவரை எழுதியதற்கே நோபெல் பரிசு கிடைக்க வேண்டும்; சங்கப் புலவர்கள் குறைவாகத் தானே எழுதினார்கள்?" என்று சொல்லிவிட்டுச் சிரிப்பார். கவிதை எழுதுவதை எளிய ஒரு பொழுது போக்காகச்சுரதா கருதுவதில்லை. கவிதை எழுதுவது என்பது அவருக்குக் கடுமையான உழைப்பு. கவிதை என்ற பெயரில், எதையாவது எழுதுவது என்பது அவருக்குப் பிடிக்காது. ஒரு வரி எழுதினாலும் அதில் அவர் உழைப்புத் தெரியும்! பேரறிஞர் அண்ணாவுக்குச் சுரதாவின் பாட்டில் ஒரு வெறியே இருந்தது. திராவிட நாடு, காஞ்சி இதழ்களை அவர் நடத்தியபோது, ஏதேனும் மலர்கள் வெளியிட்டால் சுரதாவின் பாட்டை விரும்பிக் கேட்டு வாங்கி அழகாக வெளியிடுவார். ஆனால் அண்ணாவுக்கே அவ்வளவு எளிதில் பாடலைச் சுரதா எழுதிக் கொடுக்கமாட்டார்.