பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్ఞతో சுரதா ஓர் ஒப்பாய்வு 17 1. முன்தானை 'கவிஞன் தேர்ந்தெடுக்கப்படாத சட்டப் பேராளன்' என்று ஆங்கிலப் புரட்சிக் கவிஞன் ஷெல்லி ஒரிடத்தில் குறிப்பிடுகிறான். ஒரு நாட்டுக்கு அரசியல் மேதைகளும் புரட்சிக் காரர்களும் எவ்வளவு முக்கியமானவர்களோ, அதைவிட முக்கியமானவர்கள் கவிஞர்கள். ஏனென்றால் மக்களின் கனவாகவும் கலங்கரை விளக்கமாகவும் இருப்பவன் கவிஞன்தான். கவிஞனின் கனவுகளும், தீர்க்க தரிசனங்களுமே எதிர்காலத்தின் வாயில்களைத் திறந்து விடுகின்றன. அவன் விருப்பங்களே சட்டங்கள் ஆகின்றன. உள்ளத்தின் சிலிர்ப்பே மனிதாபிமானம்; அதைத் தரண்டிவிட, உணர்ச்சி வீணையின் நரம்புகளை மீட்டுபவன் கவிஞன்தானே? தமிழகம் இலக்கியப் பறவைகளின் வேடந் தாங்கல். இங்குக் கவிக்குயில்களும், வானம்பாடிகளும் வெவ்வேறு இராகங்களில் ஓயாமல் கூவிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் உச்சிக் கிளையிலிருந்து வ.ம்பரத்தோடு கூ வும் 乐-2