பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கவிஞர் முருகு சுந்தரம் شه பதில்: நுட்பமானசிந்தனை, ஒதுங்கிய சிந்தனை. ஒரு கவிஞன் சிறந்த சிந்தனையாளனாக இருக்க வேண்டும். நான் கவிதையில் எந்தக் கருத்தைச் சொன்னாலும் எனக்கு முன் வாழ்ந்த கவிஞர்கள் சொன்ன முறையிலிருந்து மாறிப் புதுமையாகச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். சற்று ஒதுங்கிச் சிந்திப்பேன். வெள்ளை முயலைப் பார்த்தவுடன், தும்பைப் பூப் போன்ற வெள்ளை முயல்' என்றும், 'பஞ்சுடல் பசுங்கண் பாய்முயல் என்றும் பொதுவாகப் பிற கவிஞர்கள் குறிப்பிடுவர். ஆனால் நான் ஒதுங்கிச் சிந்தித்துச் சலவை முயல்” என்று வேறுவிதமாகச் சொன்னேன். இதுதான் என் வெற்றிக்குக் காரணம். கேள்வி: நீங்கள் விரும்பிப் படித்த நூல்கள் யாவை? ஏன்? பதில்: கல்லாடம், திருக்குறள், நாலடியார், தல புராணங்கள், 17-18 ஆம் நூற்றாண்டுப் புலவர்கள் எழுதிய சிறு பிரபந்தங்கள் ஆகியவற்றை விரும்பிப் படிப்பதுண்டு. கொள்கை அளவில் புராணநூல்களை நான் வெறுத்தாலும், அவற்றை எழுதிய கவிஞர்களின் ஆற்றலை மிகவும் மதிக்கிறேன். பேராற்றல் மிக்க கவிஞர் பலர் ஊர் பேர் தெரியாமல் அழிந்து போனார்கள். அவர்களுக்காக வருத்தப்படுகிறேன்.