பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g சுரதா ஒர் ஒப்பாய்வு 29 நான் படிக்கும்போது பாடலை அதிகமாகச் சுவைப்பதில்லை. அதில் பயன் படுத்தப்பட்டுள்ள கவிதை உத்திகளைத்தான் அதிகம் சுவைப்பேன். கேள்வி: கவிதை எப்படி இருக்க வேண்டும்? பதில்: முத்தத்தைப் போல் சுவையாகவும் சுருக்கமாகவும் இருக்கவேண்டும். சிறிய கவிதைகள் எழுதி வெற்றி பெறப் பெரிய ஆற்றல் வேண்டும். சொற்சுருக்கம் எனக்குப் பிடிக்கும். தாழம்பூவை மடித்துத் தலையில் செருக வேண்டும். அது போலச் சொற்களை மடித்துக் கவிதையில் செருக வேண்டும். சங்க இலக்கியத்தின் வெற்றியே சொற் சுருக்கத்தில்தான்! நல்ல கவிதைகளை எழுதுவதற்கு மிகவும் கடினமான உழைப்புத் தேவை. கவிதை எழுதுவதைவிட ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன். கேள்வி: நீங்கள் உங்கள் பாடல் வரிகளை பதிப்புக்குப் பதிப்பு மாற்றி விடுகிறீர்களே! ஏன்? பதில்: அது என் வளர்ச்சியின் அடையாளம்; ஒரு பெண் பருவ முதிர்ச்சி அடைந்த பிறகு தாவணிக்கு மாறுவது போல. கேள்வி: கதைக் கவிதைகளை நீங்கள் விரும்பி எழுதக் காரணம் என்ன?