பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-* 31 .சுரதா ஒர் ஒப்பாய்வு 2ي பதில்: அதை ஒரு காரணத்துக்காக எழுதினேன். கவிதை ஒரு வீரவழிபாடு ஆகிவிட்டது. காதல், வீரம், பக்தி என்ற இம்மூன்று பொருளைப் பற்றி எழுதுவது தான் கவிதை மரபாகத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. அம்மரபை மட்டந் தட்ட எழுதப் பட்டதுதான் சுவரும் சுண்ணாம்பும். கவிதையைப் பற்றி நீங்கள் கடைசியாகக் கூற விரும்புவது என்ன? பதில்: ஒரு கவிஞன். எழுதுவதெல்லாமே கவிதையாகி விடுவதில்லை. சிலவே கவிதை அந்தஸ்து பெறுகின்றன; தன் படைப்புக்குக் கவிதை அந்தஸ்தைத் தேடித்தரக் கவிஞன் கடினமாக உழைக்க வேண்டும். மூக்கில் நுழைவதுதான் மூச்சு; முதுகைத் தடவிச் சென்றால் அது காற்றுத்தான்.