பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கவிஞர் முருகு சுந்தரம் بیشه கொண்டிருந்தாலும், தமிழ்மொழியின் மறு மலர்ச்சி யையும், பண்டைத் தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சிப் யையும் வலுவான காரணங்களாகவும் கொண்டி ருந்தது. எனவே தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் இயல்பாகவே இவ்வியக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். தமிழ்ப்புலவர்கள் எதற்கெடுத்தாலும் சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டிப் பேசினர். சங்ககாலம் ஒரு மந்திரச்சொல்லாயிற்று. பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துக்கொண்டிருந்த இளைய தலைமுறையினர் சங்க கால உடோபியா பற்றிய கனவுகளில் வளர்ந்தனர். சங்கஇலக்கியங்கள் புரியா விட்டாலும், அதில் என்னதான் மாய மந்திரம் புதைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் குடைச்சல் அவர்களுக்கு மிகுதியாக இருந்தது. அந்த நேரத்தில்தான் டாக்டர் மு.வ. போன்ற வியாக்கியான கர்த்தாக்கள் தோன்றிச் சங்கஇலக்கியச் சாரத்தைக் காட்சி காட்சியாக வரிசை வரிசையாகப் புற்றீசல் போல வெளியிட்டனர். நாவலர்பாரதியார், மறைமலையடிகள், திருவி.க. போன்ற தமிழறிஞர்கள் திராவிட இயக்கத்துக்குத் தம் பேச்சாலும் எழுத்தாலும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர். பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார், பாரதி தாசன் இருவரும் திராவிடப் பண்பாட்டியக்கத்தின்