பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వౌ சுரதா ஒர் ஒப்பாய்வு 37 கட்டளைகளாகத் திராவிட இயக்க இளைஞர்களின் இதயத்தில் இறங்கின. இத்தகைய பரபரப்பான எழுச்சி மிக்க சூழ்நிலையில் இருபது வயது இளைஞரான சிக்கல் இராஜகோபாலன் பாரதிதாசனைத் தேடிப் புதுச் சேரிக்கு வந்தார். அவரே பின்னர் சுரதா என்னும் சுப்புரத்தினதாசன் ஆனார். சுரதா, பாரதிதாசனை வந்தடைந்தபொழுது அவருக்கென்று தனிப்பட்ட கவிதைக் கொள்கை எதுவும் உருவாகியிருக்க நியாயமில்லை. அவர் அப்பொழுது கைபடாத பச்சைக் களிமண். அப்போது பாரதிதாசன் சுரதாவுக்குக் கொடுத்த வேலை, தாம் எழுதும் கவிதைகளைப் படி எடுப்பதுதான். தமிழ்க் கவிஞர்களுள் சுரதாவின் கையெழுத்து மிகவும் அழகானது என்பது குறிப்பிடத்தக்கது. தெளிவான அழகிய சுரதாவின் கையெழுத்து, பாரதிதாசனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. பாண்டியன் பரிசை மூன்று தடவை படியெடுக்கச் சொல்லி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எப்போதும் ஒரு பாடலைப் படிப்பதைவிட, எழுதும்போது அதில் ஒரு லயிப்பு ஏற்படும். பாரதி தாசன் பாடல்களை ஓயாமல் நகலெடுத்து, அவற்றில்