பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 சுரதா ஒர் ஒப்பாய்வு في மறுமலர்ச்சிக் கால, சீர்திருத்தக் காலக் கவிதைகளின் மீது வெறுப்பும் சலிப்பும் கொண்ட இத்தாலிய மாரினினியும், ஸ்பானிய கங்கோராவும், புதிய சிந்தனைகளைப் புதுமையாகவும், புலமை நுட்பத்தோடும், நாடகப் பாங்கிலும் வெளிப்படுத்த விரும்பினர். இவர்களைப் பின் பற்றி ஆங்கில நாட்டைச் சேர்ந்த ஜான்டன்னும் தமது கவிதைகளை எழுதினார். 'உள்ளமும் ஆன்மாவும், சிந்தனையும் உணர்ச்சிப் பெருக்கும் ஒன்றாகக் கலக்கும் திருமண மஞ்சம் மெய்விளக்கக் கவிதை' என்று ஒரறிஞர் குறிப்பிடுகின்றார். இடைக்காலத்திலும் மறுமலர்ச்சிக் காலத்திலும் Metaphysics என்னும் சொல், இயல் கடந்த நிலையை (Beyond the physical)é (50.11%Li's Lucial 16551, LLG) வந்தது. அதாவது இயற்கை மீறிய, ஆன்மீகத் தொடர் புடைய செய்திகள் பற்றியது என்று பொருள் படும். மெய்விளக்கவியல் பற்றி அறிஞர் பலரும் பல விதமான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். ஆங்கிலக் கவிஞரான ட்ரைடன், ஜான்டன்னைப் பற்றி மேற்போக்காக ஒரிடத்தில் குறிப்பிடும்போது, “கவிஞர் டன் தமது படைப்புக்களால் மெய்விளக்கக் கோட்பாட்டில் பாதிப்பை உண்டாக்கியதோடு, காதலின் மென்மையான அதிர்வுகளால் அழகினத்தின் உள்ளங்களைக் கலக்கிவிட்டார்' என்று கூறுகிறார்.