பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

% 44 கவிஞர் முருகு சுந்தரம் بنكي Metaphysics என்ற சொல் உணர்ச்சி வசப்படுத்தல்' என்னும் கருத்தில் இங்குக் கையாளப்படுகிறது. மற்றோர் ஆங்கிலக் கவிஞரான ஸ்விஃப்ட் இளமைப் பருவத்தில் ஒரு பெண்ணோடு கொண் டிருந்த தொடர்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'இந்த வேண்டாத தொடர்பில், என்னைப்பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசும்படி விவேகமில்லாமல் நடந்து கொண்டேன்' என்று குறிப்பிடுகிறார். இவ்விடத்தில் Metaphysical என்னும் சொல் விவேக மின்மை என்னும் கருத்தில் கையாளப்படுகிறது. ஆங்கில அறிஞரான செளதே, 'நல்ல வாய்ப்பும், நல்ல தோற்றமும், நல்ல பேச்சும் சாதுரியமும் இல்லாதவர்கள் நுண்ணிதும், இயல்பு மீறியதுமான காதலை விரும்புவர்' என்று ஓரிடத்தில் குறிப்பிடு கிறார். இவ்விடத்தில் Metaphysical என்னும் சொல் 'இயல்கடந்த என்னும் கருத்தில் கையாளப்படுகிறது. மேலே குறிப்பிட்ட ஆங்கில அறிஞர்கள் Metaphysics என்ற சொல்லைப் புதுமையான், நம்ப முடியாத என்னும் பொருள்களில் பயன்படுத்தி யிருந்தாலும், அப்பொருள்களை மெய்விளக்கக் கவிதை (Metaphysical Poetry) களுக்கு ஏற்றிக் கூறுவது பொருந்தாக் கூற்றாகும். மெய் விளக்கக் கவிஞர்களைப் பற்றியும், கவிதைகளைப் பற்றியும் சர் ஹெர்பர்ட் கிரியர்சனும்,