பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கவிஞர் முருகு சுந்தரம் شه செறிவைக் கவிதையில் புலப்படுத்த வேண்டும் என்பதே இவர்கள் அடிப்படை நோக்கம். ஆனால் அவர்கள் அதை யாப்பில் கொண்டுவரும் போது அது கவிதையாக அமையாமல் செய்யுளாக அமைந்து விடுகிறது. அச் செய்யுள், வேலைப்பாடு மிக்கது என்றாலும், காதுகளுக்குப் பெரும் சோதனையாக அமைந்து விடுகிறது. அது வெறும் அசைகளின் கூட்டமாக அமைந்து விடுகிறதே அல்லாமல் சந்த நயம் பெறுவதில்லை. 'மெய்விளக்கக் கவிஞர்கள் இயற்கையிலோ, வாழ்க்கைத் தத்துவத்திலோ ஈடுபாடில்லாதவர்கள். ஆனால் புலமை நுணுக்கம் மிகுந்தவர்கள். அப் புலமை நுணுக்கமும், பொருத்தமற்ற படிமங்களை ஒன்றிணைப்பதிலும், ஒருபுடை ஒப்பான செய்தி களை ஒப்பிட்டுக் காட்டுவதிலும் செலவிடப் படுகிறது. அவர்கள் புதுமையான சிந்தனைகளை அடிக்கடி வெளிப்படுத்தினாலும், அவை இயல்பாகவும், தெளிவாகவும், பொருத்தமாகவும் அமைவதில்லை. கதம்பமான கருத்துக்களை வலுக்கட்டாயமாகக் கவிதையில் பூட்டுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், உவமை என்ற பேராலும் மேற்கோள்கள் என்ற பேராலும், இயற்கையையும் கலையையும் சிதைத்து விடுகின்றனர்; என்றாலும் அவர்கள் கருத்து நயம் படிப்போரை வியப்பில் ஆழ்த்தாமல் இல்லை.