பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖై சுரதா ஓர் ஒப்பாய்வு 47 தங்கள் துணிச்சலாலும், புதுமையான படிம உத்தியாலும், உழைத்து வெளிப்படுத்தும் உருவகங் களாலும், தொலைவு உவமைகளாலும், விரிவான இல்பொருள் அணிகளாலும் படிப்பவரை இவர்கள் மலைக்க வைக்கின்றனர். வியக்கத்தக்க புதுப் புனைவுகளில் ஈடுபடுகிறார்கள் என்றாலும் இவர்களுடைய கோணல் தத்துவமும், மயிர்க் கூச்செறியும் தர்க்கமும் நம்மைச் சோர்வடையச் செய்கின்றன. பொதுவாக மெய்விளக்கக் கவிஞர்கள் கோபக்காரர்கள், கடுமையானவர்கள், புரிந்துகொள்ள முடியாத மூடுசுளைகள். - 'இவர்கள் எதையும் கிழித்துக் கூறுபோட்டுப் பார்க்க விரும்புவர். ஒவ்வொரு படிமத்தையும் சுக்கு நூறாக உடைத்துவிடுவர். எதையும் இயல்பாக, முழுமையாகக் காண்பதில் இவர்களுக்குத் திருப்தி கிடையாது. சூரியனை முழுமையாகத் தரிசிக்க விரும்பாமல், அதன் ஒளிக்கற்றையை முப்பட்டைக் கண்ணாடிக்குள் செலுத்தி, அதிலிருந்து வெளிப்படும் வண்ண வண்ண ஒளிச் சிதறல்களைக் கண்டு மகிழும் ஆய்வுக்கூட விஞ்ஞானிகளைப் போன்றவர்கள் இவர்கள்' என்று குறிப்பிடுகிறார். - மெய்விளக்கக் கவிதைகள், உணர்வுகளைக் காரண காரிய அடிப்படையில் தர்க்கரீதியாக வெளிப்படுத்துவதால், சந்த இனிமையும் பொருள் புலப்பாடும் அவற்றில் அடிபட்டுப் போகின்றன."