பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- مسجمه 55 சுரதா ஒர் ஒப்பாய்வு يوليو தொடங்கின. அவை அழகின் சிரிப்பின் எதிரொலி களாகவே இருந்தன. பாரதிதாசன் குடும்பவிளக்கு மட்டும் அதற்கு விதிவிலக்கு. அதையாரும் நெருங்க முடியவில்லை. பிறர்பாடுவதற்குப் பாரதிதாசன் எதுவும் அதில் மிச்சம் வைக்கவில்லை. மேலே குறிப்பிட்ட காரணங்களால் பாரதி, பாரதிதாசன் கவிதை இயக்கம் அதிகமாகப் பழுத்து, கனிந்து, தோல் சுருங்கி அழுகும் நிலை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் சுரதா தமது புதிய கவிதைப் பாணியைத் தொட்ங்கினார். பாரதி-பாரதிதாசன் கவிதை இயக்கம் (School of Bharathi and Bharathi Dasan Poetry) Gerrtřoļssirl – நேரத்தில் தோன்றிய சுரதாவின் பாணி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மில்டன் போன்ற காப்பியக் கவிஞர்களும் (Epic Poets), வொர்ட்ஸ் வொர்த், பைரன் போன்ற கற்பனை நெறிக்கவிஞர்களும்(RomanticPoets),ஷெல்லிபோன்ற புரட்சிக் கவிஞர்களும் (Revolutionary Poets) தங்களுக் கென்று வரையறுத்துக்கொண்ட அரசியல், சமுதாயக் கொள்கைகளைக் கொண்டிருந்தனர். மெய்விளக்கக் கவிஞர்களுக்கு வரையறுக்கப்பட்ட கொள்கை எதுவும் கிடையாது. கருத்துப் புரட்சியைவிடக் கவிதை உத்திகளில் இவர்கள் புரட்சி செய்தனர்.