பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கவிஞர் முருகு சுந்தரம் شه கண்டங்களுக்குள் ஒரு கண்டமாகவும் இருப்பது போல் காமராஜர்தொண்டர்களுக்குத் தொண்டராகவும் தலைவர்களுக்குத் தலைவராகவும் விளங்குகின்றார். சித்தாந்தம் சத்தென்றால் உள்ளதென்று பொருளாம்; உன்னைத் தழுவிய பின் நானதனைப் புரிந்து கொண்டேன் சித்தென்றால் தன்னைத்தான் அறிவதென்பர்; தினையளவே நானென்னை அறிவேன் -சுரதா இதழ் 15.3.68 விநோதமான கற்பனைகள் சில சமயங்களில் மெய்விளக்கக் கவிஞர்கள் பலவித உணர்ச்சிகளால் பின்னப்பட்டு, தாங்கள் கூறுபவை காரணகாரியங்களுக்கு ஒத்துவருகின்றனவா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், புதிர் போலப் பூடகமாகக் கூறுவதும் உண்டு. சுரதாவின் படைப்பு களிலும் இத்தகைய கற்பனைகளைப் பலவிடங்களில் காணலாம். பிறர் சொல்லாத மாதிரி புதுமையாகச் சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகச் சிலவிடங்களில் குழப்பமாகவும், சிலவிடங்களில் புதிர்போலவும்,