பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

బ్రీ சுரதா ஓர் ஒப்பாய்வு 63 சிலவிடங்களில் நம்ப முடியாதபடியும் சுரதா பாடுகிறார். தன் கணவன் ரகுநாத சொக்கலிங்க நாயக்கன் இறந்த பிறகு விதவை மீனாட்சி, அரியணை ஏறித் திருச்சியை ஆட்சி செய்கிறாள். தாயுமானவர் மீனாட்சியின் அரண்மனையில், பெரிய சம்பிரதி' (தலைமைக் கணக்கர்) யாகப் பணி புரிகிறார். இளமையும் அழகும் மிக்க தாயுமானவர் மீது மீனாட்சிக்குக் காதல் ஏற்படுகிறது. அவள் தனது காதலை வெளிப்படுத்தியபோது, தாயுமானவர் மறுக்கிறார். அவளைக் கண்டிக்கவும் செய்கிறார். காதல் வயப்பட்ட மீனாட்சி, பளிங்குதனைக் கரைத்ததுபோல் இருக்கும் நீரின் பாசியென்றே ஏசியெனைப் பேசினாலும் அளவுக்கே அடங்காத ஆசையென்னை அங்குமிங்கும் இழுக்கிறதே என்ன செய்வேன்! வளைவுதனை முடிப்பதில்லை புருவம்; எல்லாம் வாழ்நாளில் நிறைவேறி விடுவதில்லை. பிளவுபடும் இயல்புடைய உளுந்தின் கூட்டம் போன்றவர் அன்றோபுவியில் வாழும் பெண்கள்! என்று கூறி மன்றாடுகிறாள். 'பெண்களைப் பிளவுபடும் உளுந்தின் கூட்டம்' என்று சுரதா ஏன் குறிப்பிடுகின்றார் என்னும் காரணம் தெளிவாகப் புரியவில்லை.