பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கவிஞர் முருகு சுந்தரம் - شه வினை, பயன், மெய், உரு என்னும் உவமை வகையில் எதைச் சேர்ந்தது இது என்றும் புரியவில்லை. உளுந்து மட்டுமா பிளவுபடுகிறது? எல்லாப் பருப்பு வகைகளுந்தான் பிளவுபடுகின்றன. உளுந்தை மட்டும் இங்கு அவர் ஏன் குறிப்பிடுகிறார்? படிப்பவர்கள் குழப்பமடைகிறார்கள். வன்னிய வீரன் காப்பியத்தில் பஞ்சணைப் பறவை வேசிகுப்பாச்சியை அறிமுகம் செய்யும் கவிஞர், வேசி குப்பாச்சியோர் விளம்பர விளக்கு பாவின் இனத்தைச் சேர்ந்த பரத்தை என்று குறிப்பிடுகிறார். 'பரத்தையைப் பாவின் இனத்தைச் சேர்ந்தவள்’ என்று குறிப்பிடக் காரணம் என்னவென்று நம்மால் புரிந்து கொள்ள முடிய வில்லை; குழம்புகிறோம். 'வேற்றுத் தளைவிரவ நடக்கும் பா' என்று சொன்னால் கூட ஒரளவு பொருத்தமாக இருக்கலாம். 'கொய்யாக்கனி' என்னும் பாடலில் ஒரு பெண்ணைப் பற்றிப் பாடவந்த சுரதா, வெள்ளிக் கிழமை பிறந்தவளாம் - அவள் வேலிப் பருத்தியைப் போன்றவளாம்