பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கவிஞர் முருகு சுந்தரம் شه குருவிகளும் தாமரையும் அயர்ந்து துரங்கும் - குளிர் இரவில் உயிர்கொல்லும் புதுப் பீரங்கி மருந்தெடுத்து வாயாலே அதனை ஊதி மாவீரன் ஒரிடத்தில் இருட்டு செய்தான். 'இருங்களென்று முந்தானை தனைய விழ்த்து ஏந்திழையாள் திரைபோட ஆரம் பித்தாள். கரம்பிடித்தான் கட்டழகன்; கன்னி அந்தக் கட்டழகன் தொட்டவுடன் குளிர்ந்து போனாள். மே Gaు குறிப்பிடப்பட்டுள்ள சுரதாவின் கற்பனைகள் நம்பமுடியாதனவாகவும், இயற்கைக்கு மாறுபட்டும், பொருத்தமில்லாமல் இருந்தாலும், புதுமை கருதியும், சுவை கருதியும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. சாடல் மெய்விளக்கக் கவிஞர்கள் பிறரைச்சாடும்போது கடுமையான சொற்களைக் கையாளத் தயங்குவ தில்லை. சுரதாவும் தயங்கியதில்லை. எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டுத் திறப்பு விழாவும் சிறப்பாக நடத்தப் பட்டது. 'பாரதி உலகக் கவியல்ல!" என்று மறுத்து முன்னொரு காலத்தில் அறிக்கைவிட்ட கல்கி, விழாவை முன்னின்று நடத்தினார். புகழ்பெற்ற திரைப்பட நடசத்திரங்களும் அரசியல் வாதிகளும் விழாவில் கலந்துகொண்டனர். ஆனால் பாரதியோடு