பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-* 75 கரதா ஓர் ஒப்பாய்வு وية எப்போதும் கிடைப்பதில்லை. அத்தகைய வாய்ப்பை ஒர் ஆண்மகன் விரும்பிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தயக்கமோ தடுமாற்றமோ கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்துகிறாள் அரசி. இதற்குச் சுரதா பயன்படுத்தும் படிமம் வியக்கத்தக்கது. சாய்ர் தி & e - மரத்தி - G - ஏறி ஒடத் தயக்கமேன்? தாமதமேன்? தடுமாற்றம் ஏன்? இதற்குத் தாயுமானவரின் மறுப்பைப் புலப் படுத்த வந்த சுரதா, சிறப்பான ஒரு படிமத்தின் மூலம் புலப்படுத்துகின்றார். வலைவீச முயல்கின்றாய் பாவம் வீனில் மலைமீதேன் அடிக்கின்றாய் ஆணி? 'முடியாத ஒன்றிற்கு முயற்சிக்கக் கூடாது' என்பதை, இதைவிட ஆற்றலோடு புலப்படுத்த வேறு எந்தப் படிமத்தால் முடியும்? கப்பல்கள் மேயாத கடலைக்கணவனை இழந்த பெண்ணுக்கு ஒப்பிடும் சுரதா, மக்கள் ஆரவாரத் தோடும், பண்டக சாலைகளோடும், கப்பல்கள் புடைசூழ இருக்கும் துறைமுகத்தை, மாதரும் மங்கலப் பொருளும் சுற்றமும் சூழ மணவறையில் தோன்றும் மணப்பெண்ணாகக் கூறும் படிமம் மிகச் சுவையானது.