பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கவிஞர் முருகு சுந்தரம் ش துணையொடு கப்பல் நிற்கும் துறைமுகம் சுற்றம் சூழ மணவறை மீது தோன்றும் மங்கையைப் போன்ற தாகும். கணவனை இழந்த பெண்ணும் கலமற்ற கடலும் ஒன்றே சிறு பிரபந்தங்களில் சுரதாவுக்கு ஈடுபாடு அதிகம். அவர் படிக்காத பிரபந்தமே இல்லை என்று சொல்லலாம். அவற்றுள்ளும் தூதுப் பிரபந்தம் என்றால் அவருக்குப் பலாச்சுளை மாதிரி. பிரபந்த உத்திகளை நிறையத் தம் கவிதைகளில் கையாள் வதோடு, அவைகளில் வரும் உவமைகளையும் கையாள்கிறார். தூதுப் பிரபந்தங்களில் அடிக்கடி காட்சிதரும் விலைமாதர்களை இவர் எப்போதும் விட்டு வைப்ப தில்லை. தம் படைப்புகளில் அவர்களுக்கு அடிக்கடி இடங்கொடுத்து வாழவைப்பது அவர் வழக்கம். ஓரிடத்தில் விலை மாதரை மிகப் பொருத்தமான ஒரு படிமமாக அவர் கையாள்கிறார். - திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணியைப் பாராட்டப் புகுந்த சுரதா, அதன் எளிமையையும் கருத்துப் புலப்பாட்டின் அருமையையும் குறிப்பிடும் போது,