பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கவிஞர் முருகு சுந்தரம் மி. எனவும் வரும் தொல்காப்பியச் சூத்திரங்களால் அறியலாம். பண்டைக் காலத்தில் புலமை நுட்பத்தை அளக்கும் அளவுகோலாக உவமை இருந்து வந்திருக் கிறது. குறுந்தொகை என்னும் சங்க இலக்கியத்தில் கடவுள் வாழ்த்து உட்பட நானுற்றொரு பாடல்கள் உள்ளன. பெருந்தேவனார் முதல் அம்மூவனார் இறுதியாக இருநூற்றாறு புலவர்கள் அதில் பாடி யுள்ளனர். அவர்களுள் பதின்மூவரின் பெயர்கள், அவர்கள் தமது பாடலில் எடுத்தாண்ட உவமை களாலேயே வழங்கப் பெறுகின்றனஎன்பதை அறியும் போது உவமையின் சிறப்புப் புலனாகும். உவமைகளின் உறுப்புக்கள் நான்கு. அவை உவமானம், உவமேயம் (பொருள்), உவம உருபு, உவமைக்கும் பொருளுக்கும் உள்ள பொதுத்தன்மை என்பன. தொல்காப்பியர் காலத்தில் உவமையே அணியாகக் கருதப்பட்டது. அதனால்தான் செய்யுள் அலங்காரம் பற்றிக் கூறவந்த இயலுக்கு உவமவியல்' என்று அவர் பெயரிட்டார். இந்த உவமை அணியே பிற்காலத்தில் தோன்றிய அணிகளுக்குத் தாயாக விளங்கியது. - உவமை கவிதையில் தானாக வந்து குதித்து விடாது என்றும், ஒரு கவிஞன் நன்கு சிந்தித்தால்தான்