பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கவிஞர் முருகு சுந்தரம் شه கூறிய தொலைவு உவமைகளுள், காதலர்களுக்கு உவமையாகச் சொன்ன ஈயும் (Flea), கவராயமும் (Compass) பாராட்டுப் பெற்றவை. வேறு ஓர் உவமையை நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன். ஜான் டன் எழுதிய பாடல்களுள் காலை ouemrösli ' (The Good-Morrow) 67còrgoyli, Lunl gylb குறிப்பிடத்தக்க ஒன்று. இதில் ஒரு பெண்ணிடத்தில் தான் கொண்டிருக்கும் தெய்வீகக் காதலைப் பற்றிக் (Spiritual love) குறிப்பிடுகிறான். 'மெய்விளக்கத் தத்துவப்படி, எந்த ஒரு பொருளும் அதன் மூலப் பொருட்களுள் முரண்பாடு தோன்றும்போது அழிகிறது. ஆனால் இவர்கள் காதலோ ஒரே மூலப் பொருளால் ஆக்கப்பட்டு ஒரே மாதிரியாக இருப்ப தால் அதற்கு அழிவில்லை' என்று குறிப்பிடுகிறான். என் முகம் உன் கண்ணிலும் உன் முகம் என் கண்ணிலும் தெரிகின்றன. நம் தரய உள்ளங்கள் தம் முகத்தில் தென்படுகின்றன. வடக்கில் குவியாத மேற்கில் சரியாத நம்மினும் சிறந்த அர்த்த கோளங்களை எங்குக் காணமுடியும்?