பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 சுரதா ஓர் ஒப்பாய்வு فيبي முத்து, முல்லை, கோவைப்பழம் போன்ற பொருள்கள் கவிதையில் உவமை சொல்வதற் கென்றே பிறப்பெடுத்தவை. இவை பிற பொருள் களுக்கு உவமைகள் ஆகின்றனவே தவிர, இவை களுக்கு உவமை கூறுதல் வழக்கில் இல்லை. அப்படிக் கூறினாலும் மிகவும் அரிதாகக் கூறுவர். சிலப்பதி காரத்தில் முத்துக்கு உவமை கூற வந்த இளங்கோவடிகள், சந்திர குருவே அங்கா ரகனென வந்த நீர்மைய வட்டத் தொகுதியும் - என்று குறிப்பிடுகிறார். இதில் வெண்ணிர்மை கொண்ட முத்திற்கு வெள்ளி என்னும் கோளையும், செந்நீர்மை கொண்ட முத்துக்குச் செவ்வாய்க் கோளையும் உவமை கூறுகின்றார். ஆங்கிலக் கவிஞனும் நாடகாசிரியருமான ஆஸ்கார் வைல்டு தான் எழுதியுள்ள சலோமி என்ற நாடகத்தில் சரிகைப் பையிலிட்ட முத்துக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது தங்க வலைக்குள் பிடித்து Gnoušg &lbl. 151 flavojčair' (They are like fiftymoons caught in a golden net) என்று குறிப்பிடுகிறான். இங்கே முத்துக்களுக்கு நிலவு உவமையாகிறது. ஒட்டகம் தமிழ்நாட்டு விலங்கு அன்று. ஊருக்குள் வட்டக் காட்சிகள் (Circus) வரும்போது மட்டுமே அவற்றைக் காணமுடியும். குதிரையின்