பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ు சுரதா ஓர் ஒப்பாய்வு 89 சமுதாய சீர்திருத்தச் சிந்தனைகளைத் துணிச்ச லோடு பரப்பி வந்த ராஜாராம் மோகன்ராய்க்கு எதிர்ப்பும் அதிகமாக இருந்தது. பழமை விரும்பிகள் அவரை ஒழித்துக்கட்ட ஒரு கொலையாளியை ஏவினர். அக்கொலையாளி மிகவும் உயரமானவன். அவனுக்கு உவமை சொல்ல அவனைப் போல் உயரமான ஓர் ஆளைத் தேடினார் சுரதா, சீன வரலாறு அவருக்குக் கை கொடுத்தது. சீன ஞானி கன்பூவி யஸின் தந்தை ஹாலி யாங்ஹை என்பவர் பத்தடி உயரம் இருந்தார் என்று எங்கோ படித்திருக்கிறார். உடனே அச் செய்தியைத் தமது கவிதை வாகனத்தில் ஏற்றிவிட்டார். கன்யூஷ்யஸ் என்பவனோ சீன ஞானி கற்றறிந்த மாமேதை உலகம் போற்றும் அன்பாளன்; அவன்தந்தை ஹஅலி யாங்ஹை! அவனுயரம் பத்தடியாம்; சென்ற திங்கள் முன்கோபத் தோடென்னை வெட்ட வந்த முட்டாளும் அவனுயரம் இருப்பான்! என்று பாடுகிறார். இவைபோன்று நுட்பமாகச் சிந்தித்து எழுதும் தொலைவு உவமைகள் (far fetched Similes) சுரதாவின் பாட்டிலே மலிந்திருக்கின்றன. முக்கோணத் தமிழகத்தைத் தலைகீழான ஆய்த எழுத்துக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்: