பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கவிஞர் முருகு சுந்தரம் شه உணர்ச்சி ஒட்டம் திடீரென்று தோன்றி விரைவதை உணர்வர். இதற்கு உவமை கூற வந்த சுரதா, தளர்ந்தோடும் நதியின்நீர் மழைக்கா லத்தில் தனிவேகம் பெறுவதுபோல் உணர்ச்சி பெற்றாள்' என்று பாடுகிறார். ஆற்றில் திரியும் தெப்பம் நனைந்து எப்போதும் ஈரமாக இருக்கும். எப்போதும் ஈரமாக இருக்கும் விலைமாதைத் தெப்பம்போல் எப்போதும் நனையும் நங்கை என்று குறிப்பிடுவதும், அவள் கச்சுக் கடங்காத கொங்கையை, அசோகன் ஆட்சிக்(கு) அடங்காத தமிழாட்சி போன்று கச்சுக்(கு) அடங்காத பொன்கொங்கைக் குடங்கள் " என்று குறிப்பிடுவதும், கவிஞரின் குறும்புக்கார உவமைகள். காதலன் முன் காதலி வெட்கித் தலை குனிவது சங்க இலக்கியம் முதலாக எல்லா இலக்கியங்களிலும் பேசப்படும் பொதுவான நிகழ்ச்சி. ஆட்டனத்தியின் பாராட்டைக் கேட்டு, ஆதிமந்தி நாணத்தால் குனிந்தாள். எப்படி? 'பிழிந்ததொரு புடவையெனக் குனிந்து கொண்டாள். இந்த உவமையின் அழகிலும் மெய் மறந்து நம்மை இழந்து நிற்கிறோம். சலவைத்