பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్రో சுரதா ஓர் ஒப்பாய்வு 95 8. சுரதாவின் நடை Quongolsbøl soul offióGuégocio Style and diction என்று குறிப்பிடுவர். இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்களுள் சுரதாவின் கவிதைநடையை மிஞ்சும் ஆற்றல் பெற்ற கவிஞர்கள் வேறு யாருமில்லை. "இஃதுண்மை. வெறும் புகழ்ச்சியில்லை!" சுரதாவின் நடையில் எளிமை, இனிமை, அழகு மூன்றையும் காணலாம். சென்ற நூற்றாண்டுக் கவிஞர்கள் எளிமையை இகழ்ந்தனர்; 'வெள்ளைப் பாட்டு என்று கேலி செய்தனர். ஆனால் எளிய சொற்களில் அரிய கருத்துக்களை எடுத்துச்சொல்லத் தெளிந்த சிந்தனையும், அரிய ஆற்றலும் வேண்டும். அதை முதலில் சாதித்துக் காட்டியவர் இராமலிங்க அடிகள். சுரதா கவிதையில் பயன்படுத்தும் சொற்கள் எளிமையானவை; ஆனால் அவர் கவிதையில் கையாளும் கருத்துக்கள் அரியவை. அவற்றை எல்லாரும் புரிந்துகொண்டு சுவைக்க முடியாது. அதற்கு இலக்கண இலக்கியப் புலமையும், பல்துறை அறிவும் வேண்டும்.