பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தப்படம் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்றது. அக்காலத்தில் வசன உலகத்தின் சக்கரவர்த்தியாக இருந்த இளங்ககோவன் அவர்கள் உவமைக் கவிஞரின் உரையாடல் திறனைப் பெரிதும் பாராட்டினார். உவமைக்கவிஞரின் "மங்கையர்க்கரசி" வசனம் மிகவும் புகழ்பெறவே அதை நூல் வடிவில் கவிஞர் வெளியிட்டார். பாவேந்தர், நாமக்கல் கவிஞர் இருவரின் வாழ்த்துரையுடன் வெளி வந்த இந்த வசன நூல்தான் ஒரு திரைப் படத்தின் கதைவசனம் புத்தக வடிவில் முதன் முதலாக வந்ததாகும்.

உவமைக்கவிஞரின் முதல் நூலை வி.ஆர்.எம். செட்டியார் ஸ்டார் பிரசுரமாக 1946ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டார். புத்தகத்தின் பெயர் "சாவின் முத்தம்".

1956-ல் "பட்டத்தரசி" என்கிற சிறு காவிய நூலை உவமைக் கவிஞர் வெளியிட்டார். 16 பக்கங்கள் கொண்ட பரபரப்புக்குரிய அந்நூலின் முன்னுரைக்கவிதையை ஒரு மணிநேரத்திலேயே எழுதி முடித்து சாதனை படைத்தார்.

1954ல் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 'முரசொலி" இதழில் உவமைக் கவிஞர் தொடர்ந்து கவிதை எழுதி வந்தார். எழுச்சியும், வேகமும் நிறைந்த அந்தக் கவிதை