உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சுரதா கவிதைகள்


பழந்தமிழ் கற்றல் இன்பம்
        பலநாடு சுற்றல் இன்பம்
எழுந்திடு புதுமை தன்னை
        ஏற்றிடல் வாழ்வுக் கின்பம்

–நூல் : தேன்மழை

துன்பங்கள் இன்பத்தின் முற்றப் புள்ளி
        துடிக்கின்ற இளமையிலே நமக்குத் தோன்றும்
இன்பங்கள் அனைவருமே விரும்பும் பள்ளி.

மகிழ்ச்சி

காதல் நிகழ்ச்சியோ இருவரின் மகிழ்ச்சி!
திருவிழா நிகழ்ச்சியோ முழுஊர் மகிழ்ச்சி!

குடும்பம்

இரவும் பகலும் இயற்கைக் குடும்பம்!
எண்ணும் எழுத்தும் இலக்கியக் குடும்பம்!
பாட்டும் பரதமும் நாட்டியக் குடும்பம்!


குழந்தை குட்டிகள் கூடுத லானால்
அந்தக் குடும்பமும் அவர்கள் வாழ்க்கையும்
பாறையில் மோதிய படகுபோ லாகும்.