இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
85
தாய்
இலையை மலரைக் காய்களைக் கனிகளைத்
தருவத னாலே தருவென் றழைக்கிறோம்
தருவைப் போன்று தருபவள் ஆதலின்
தாலாட்டும் அன்னையைத் தாயென் றழைக்கிறோம்.
✽✽✽
இருவென்றோ இலையென்றோ சொல்லி டாமல்
இருப்பவற்றைத் தருகின்ற காரணத்தால்
தருவென்று மரத்திற்குப் பெயரிட் டார்கள்.
தருவைப்போல் தருபவளைத் தாயென் றார்கள்.
✽✽✽
தனிமை என்பது பிரிவின் சரித்திரம்
தாய்மை என்பது கருவின் சரித்திரம்
✽✽✽
ஓரறி உயிர்களின் கருவறை பூமியாம்!
ஆறறி உயிர்களின் கருவறை அன்னையாம்.
குழந்தை
தாமரையும் அல்லிகளும் தண்ணீர்ப் பூக்கள்
தளிர்போன்ற குழந்தைகளே மழலைப் பூக்கள்